முதல் தமிழ்ச் சங்கம்
- DBTC

- Sep 23
- 1 min read
2025 – 2026 கல்வி ஆண்டின் முதல் தமிழ்ச் சங்க அமர்வானது போப் பிரான்சிஸ் குழுவால் 15.07.2025 அன்று தொன்போஸ்கோ அரங்கில் செப வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. “திருஅவையும் திருநங்கையர்களும்” என்ற தலைப்பில் முதல் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது. இத்தமிழ்ச் சங்க அமர்விக்கு சிறப்பு விருந்தினர்களாக திருநங்கை இன்பா இக்னே~pயஸ் மற்றும் திருநங்கை சுதா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணமாக பொன்னாடையும், னுடீவுஊ தேல்பட்டையும் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் முதல் பேச்சாளராக சகோதரர் ஹெர்மன் அவர்கள் திருஅவையில் திருநங்கையர்களின் இடமும் மற்றும் அவர்களின் பணிகளையும் திருஅவையின் கடிதங்கள் வாயிலாக எடுத்து விளக்கினார். சகோதரரின் உரையை தொடர்ந்து சகோதரர் ஜேம்ஸ் சிறப்பு விருந்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து திருநங்கை இன்பா அவர்கள் திருநங்கையர்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய மற்றும் திருநங்கையர்களை பற்றி திருஅவை மற்றும் சமுதாயத் கருத்துக்கள் என்ற தலைப்பில் தமது உரையை வழங்கினார். அதனை தொடர்ந்து திருநங்கை சுதா அவர்கள் தமிழக அரசில் திருநங்கைகளின் உரிமைகளும் மற்றும் கடமைகளும் ஓர் அரசியல் பார்வை என்ற தலைப்பில் தமது உரையை வழங்கினார். இருவரின் உரைகளும் நல்ல கருத்துக்களை உள்ளடக்கியதாகவும், புதிய சிந்தனைகளை தூண்டக்கூடியதாகவும் இருந்து. பிறகு சகோதரர் பால்ராஜ் அவர்கள் கலந்துரையாடலை வழிநடத்தினார். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் சகோதார்: பென்னி மார்டின் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். நன்றி உரையினை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தமிழ்ச் சங்கம் 1. 15 மணியளவில் இனிதே நிறைவுற்றது.






Comments